தானத்தினும் சிறந்தது ஏதேனும் உண்டோ?

>> Tuesday, March 23, 2010

நாம் அளிக்கும் இரத்தமே ஐந்து நபர்களைக் காப்பாற்றும் எனில் நாம் இறந்த பின் நமது உடலில் உள்ள உறுப்புகள் எதனை நபர்களுக்கு பயன்படும் என்று எண்ணிப் பாருங்கள். இறந்த பின் மண் உண்ணும் உடலை பிறர் வாழ அவற்றை தானம் செய்தல் தான் என்ன...?
எந்த உறுப்புகளை எல்லாம் தானமாக அளிக்க முடியும்?கண்கள், இதயம், இதய வால்வுகள், கிட்னி, எலும்புகள், எலும்பு மஜ்ஜைகள், தோல், இன்னும் பலவற்றை தனம் அளிக்க முடியும். அது மட்டும் இன்றி உடல் மொத்தத்தையும் ஆராய்ச்சிக்காக அளிக்கமுடியும்.
இறந்த நபரிடம் இருந்து பெறப்படும் உறுப்புகளை எத்தனை மணி நேரம் வரை காக்க முடியும்?இதயம் 5 மணிநேரமும், கிட்னியை 18 மணி நேரமும், கண்களை 10 மணி நேரம் வரையும், தோல், இதய வால்வுகள், எலுப்பு மற்றும் அவற்றின் மஜ்ஜைகளை 5 ஆண்டுகள் வரி காக்க முடியும்.நாம் இறந்த பின்னும் இத்தனை உயிர்கள் வாழும் என்றால் அதைவிட சந்தோஷம் வேறு எதுவாய் இருக்க முடியும்.

உடல் தானம் செய்திடுங்கள்.

Read more...

  © Blogger template Snowy Winter by Ourblogtemplates.com 2009

Back to TOP