சமச்சீர் கல்வி வரவேற்க வேண்டிய ஒன்றா?

>> Thursday, February 25, 2010

தமிழகம் முழுவதும் ஒரே வகையான பாடத்திட்டம் என்றால் யார் தான் வரவேற்க மாட்டர்.
நிச்சயம் வரவேற்க வேண்டிய ஒன்றுதான். வசதி பெற்றோர் / அற்றோர் என்ற வேறுபாடுகள் களைந்து அனைவருக்கும் கல்வி ஒருங்கே சென்று சேரும். அரசுப் பள்ளிகளில் தமிழ் வழியிலும் தற்போது கோளோச்சி வரும் ஆங்கிலப் பள்ளிகளான மெட்ரிக் பள்ளிகளில் ஆங்கிலம் வழியிலும் கல்வி கற்பிக்கப்படும் போல் தெரிகிறது. அப்படி இருப்பின் அதை எப்படி சமச்சீர் கல்வி எனப் பெருமைப்பட முடியும்.
ஆங்கிலம் அனைவருக்கும் அவசியம் என்ற இன்றைய நிலையில் அரசுப் பள்ளிகளில் மட்டும் தமிழ் என்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். அதற்க்கு தற்போதுள்ள கல்வி முறையே இருந்து விடலாமே. அவ்வாறு இன்றி அரசுப் பள்ளிகளிலேயே தமிழ் மற்றும் ஆங்கிலப் பிரிவு வைத்து விரும்பும் மொழியில் படிக்கும் வாய்ப்பினை நம்அரசு அளித்தால் அனைத்து மாநிலங்களுக்கும் கல்வியில் முன்னுதாரணமாக இருப்போமல்லவா.
சமச்சீர் கல்வியால் பெருத்த மாற்றம் ஒன்றும் ஏற்படப் போவதில்லை. தற்போது மெட்ரிக் பள்ளிகளாய் இருக்கும் அனைத்து பள்ளிகளும் CBSE பள்ளிகளாக மாற முயற்சித்துக் கொண்டுள்ளது. அப்படி மாறினால் மெட்ரிக் / அரசு பள்ளி என்ற போட்டி மறைந்து அரசுப் பாடத்திட்டம் / CBSE பாடத்திட்டம் என்ற யுத்தம் கிளம்பாதா?.
தமிழகத்தில் மட்டும் சமச்சீர் என்பதை விட இந்தியா முழுவதும் சமமாக தாய்மொழி / பிராந்திய மொழிகளில் கல்வி அமையப்பெருவதே சிறந்ததாய் இருக்கும்.
தற்போது கூறுங்கள் தமிழக சமச்சீர் கல்வி என்பது சிறந்ததா? வரவேற்க வேண்டியதா?

0 comments:

Post a Comment

  © Blogger template Snowy Winter by Ourblogtemplates.com 2009

Back to TOP