சீறாப்புராணம்

>> Monday, January 18, 2010


உமறுப் புலவரின் சீறாப்புராணம்
உள்ளுறை
1.0 கவியேறு உமறுப் புலவரவர்களின் வரலாற்றுச் சுருக்கம்
1.0 சீறாப்புராணம் இயற்றப்பெற்ற வரலாறு
1.1 கடவுள் வாழ்த்துப் படலம்(1-20)
1.2 நாட்டுப் படலம்(21-76)
1.3 நகரப் படலம்(77-98)
1.4 தலைமுறைப் படலம்(99-165)
1.5 நபியவதாரப் படலம்(166-290)
1.6 அலிமா முலையூட்டுப் படலம்(291-390)
1.7 இலாஞ்சனை தரித்த படலம்(391-481)
1.8 புனல் விளையாட்டுப் படலம்(482-538)
1.9 புகைறா கண்ட படலம்(539-596)
1.10 பாதை போந்த படலம்597 - 679
1.11சுரத்திற் புனலழைத்த படலம்680 - 699
1.12 பாந்தள் வதைப் படலம்700 - 722
1.13 நதி கடந்த படலம்723 - 753
1.14 புலி வசனித்த படலம்754 - 767
1.15பாந்தள் வசனித்த படலம்768 - 785
1.16இசுறா காண் படலம்786 - 840
1.17கள்வரை நதி மறித்த படலம்841 - 856
1.18ஷாம் நகர் புக்க படலம்857 - 900
1.19கரம் பொருத்து படலம்901 - 966
1.20ஊசாவைக் கண்ட படலம்967 - 996
1.21கதீஜா கனவு கண்ட படலம்997 - 1033
1.22மணம் பொருத்து படலம்1034 - 1096
1.23 மணம்புரி படலம்1097 - 1215
1.24 ககுபத்துல்லா வரலாற்றுப் படலம்1216 – 1240

கவியேறு உமறுப் புலவரவர்களின் வரலாற்றுச் சுருக்கம்

பெருமானார் முஹம்மது(ஸல்) அவர்களின் காலத்தில் அப்துல்லாஹ் இப்னு பாகிர் என்பார் வாழ்ந்திருந்தார். பெருமானாரின் திருத்தோழராகும் பேறு பெற்ற அன்னார், அண்ணலாரின் அரிய வாழ்த்தினைப் பெற்றவர்.அவாரின் வழித்தோன்றல்கள் அனைவரும் காலமெல்லாம் கமழ்மணத்துடன் வாழவேண்டும் என்றே அண்ணலார் ஆசி கூறினார். அந்த பரம்பரையில் வந்தவரே 'சேகு முதலியார்' என்ற செய்கு முஹம்மது அலியார் ஆவர். அன்னார் மலையாள நாட்டிலிருந்து தமிழ்நாட்டிற்க்கு வந்து,திருநெல்வேலியைச் சார்ந்த நாகலாபுரத்தில் குடியிருந்து கொண்டு, அதையடுத்திருந்த எட்டையபுரத்து மகாராஜாவிடம் வாசனைத் திரவியங்களை எடுத்துப் போய் விற்றுக் காலம் கழித்து வந்தார்.உயர்ந்த மணப்பொருட்களை வழங்கித் தம் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட சேகு முதலியார் தம் அருகிலேயே வாழ்ந்து வரவேண்டு மென்று மன்னர் விரும்பினார்.என்வே, சேகு முதலியாரும் மன்னரின் விருப்பிற்க்குக் கட்டுப்பட்டு, நாகலாபுரத்திலும் எட்டையபுரத்திலுமாக வாழ்ந்து வந்தார். அக்காலத்தில்தான், அவருடைய ஒப்பற்ற அருந்தவக் கொழுந்தாக 'உமறு' என்ற அழகிய குழந்தை பிறந்தது. இளமையிலே எழிலும் கல்வியார்வமும் வாய்க்கப் பெற்ற சிறுவர் உமறு, எட்டையபுரத்து அரண்மனைத் தமிழ்ப்புலவராயிருந்த 'கடிகை முத்து புலவர்'என்பாரிடம் தமிழ்க் கல்வி பயிலத் தொடங்கினார்.பல்வகைக் கல்வி-கேள்விகளில் தேர்ந்த உமறு,தம் ஆசானின் பெருமதிப்பிற்குாரிய மாணவரானார். இவ்வாறிருக்கையில், ஒருநாள் வடநாட்டிலிருந்து ஆாரியமும் அருந்தமிழும் கற்றுப் புலமை பெற்ற 'வாலை வாருதி' என்ற புலவர் எட்டையபுர அரசவைக்கு வந்து சேர்ந்தார்.தம்மை வாதில் வெல்லத் தக்கார் யாருமிலார் என்று அவர் மார் தட்டிப் பேசிப் பிற புலவர்களை வாதுக்கழைத்தார். அதன்படியே எட்டையபுரத்து அரசவையிலும் வந்து அறிவித்தார். மன்னரும் ஆவன செய்ய இசைந்தார்.புலமைத் திறத்தாலன்றி, மாய மந்திரங்களாலேயே பல அரசவைப் புலவர்களை வெற்றிகொண்ட வாலைவாருதியைப் பற்றிக் கடிகைமுத்துப் புலவர் கேள்வியுற்றிருந்தார். அதனால், வித்தைகள் புரியும் வித்துவானைத் தம்மால் எவ்வாறு வெற்றிகொள்ள முடியுமென்ற நீங்காக் கவலையில் ஆழ்ந்திருந்தார்.ஆசானின் கவலையை அறிந்த மாணவர் உமறு,அவரை அணுகி,கவலைக்கான காரணத்தை விளங்கிக்கொண்டார். எனவே, வாலை வாருதியுடன் வாதிடுவதற்கான குறிப்பிட்ட நாள் வந்ததும், தம் ஆசிரியாரிடம் அவருக்குப் பகரமாக அரசவை செல்லுவதற்கான அனுமதியை வலிந்துப் பெற்று,எட்டையபுரத்து அரசவைக்கு வந்து சேர்ந்தார்.உடல் நலக் குறைவால் கடிகைமுத்துப் புலவர் வரவில்லையென்றும்,அவருக்குப் பகரமாக அவாரின் மாணவர் வந்திருக்கிறார் என்றும்,வாலை வாருதி தம் சொற்பொழிவைத் தொடங்கலாம் என்றும் மன்னர் உத்தரவிட்டார்.அதைச் செவியேற்ற வாலைவாருதி,தம் வலக்கையிற் போட்டிருந்த தங்கக் கடகத்தை அசைத்து மேலேற்றினார்.வழக்கமாக அக்கடகத்திலிருந்து ஒலிக்கும் 'வாலைவாருதி என்றறியீரோ' என்ற சொற்கள், அன்றைக்கு மட்டும், 'வாலைவாருதி என்றறியாயோ பிள்ளாய்!'என்று உண்டாயின.அப்போது உமறுப் புலவர்,தம் இடுப்பில் செருகியிருந்த யாழ்ப்பாணத்து எழுத்தாணியை எடுத்து நிலத்தில் ஊன்றி,"என் எழுத்தாணியே! இவருக்கெதிர் பேசு!"என்று கட்டளையிட்டார். ஒன்றும் நிகழவில்லை!பின்னும் உத்தரவிட்டார்.அப்போதும் ஏதும் நிகழவில்லை!மூன்றாவது முறையிலும் முயன்று தோல்வி கண்ட உமறு, கண்கள் சிவக்க,முகத்தில் தீக்கனல் பறக்கக் கடுஞ்சினம் கொண்டு, எழுத்தாணியைப் பார்த்து, 'பேசு!'என்று உரக்கக் கூறி உத்தரவிட்டார். அவை கிடுகிடுத்த அவ்வோசையைத் தொடர்ந்து, அவ்வெழுத்தாணியிலிருந்து கீழ்க்காணும் பாடல் உதிர்ந்து உள்ளங்களை அதிர வைத்தது:"சமரதுர கததுங்க மனருஞ்ச பாசென்றுசாரிசமா சனமீதிலேஅமரவொரு நரகொம்பு தினமுஞ்சு மாசெல்லுமமுதகவி ராஜனானேதிமிரபகை வரைவென்ற பருதியெனு மெமதெட்டத்தீரனணி வாயில்வித்வான்உமறுகுமு றிடிலண்ட முகடும்ப டீரென்னுமுள்ளச்சம் வையும்பிள்ளாய்!"இதனைச் செவியுற்ற புலவர் வாலைவாருதி,உளம் பதறி,மெய் நடுக்குற்று,தனது மந்திரச் சக்தியெல்லாம் இத்தகைய அற்புதத்தின் முன் அற்பம் என்றுணர்ந்து, எழுந்து சென்று உமறு புலவாரிடம் மண்டியிட்டு மன்னிப்புக் கோரி,அரசவையை விட்டு அகன்றார்.இந்நிகழ்ச்சி, மன்னருக்கு உமறுப் புலவர் மீது ஒப்பற்ற மதிப்பை ஏற்படுத்திற்று. மகிழ்ச்சிப் பெருக்கால், மன்னர் தம்மிடமிருந்த விருதுகள் பலவற்றையும் உமறுப் புலவருக்கு வழங்கி அனுப்பிவைத்தார். வெற்றி பெற்று வீடு திரும்பிய தம் மாணாக்கரை இறுகத் தழுவிக்கொண்ட கடிகைமுத்துப் புலவர்,தாம் அப்போது முதுமை எய்திவிட்டதால், அன்றுமுதல் உமறே எட்டையபுரத்து அரண்மனை அவைப் புலவராக இருக்கவேண்டுமென்று ஆசி கூறி அனுப்பி வைத்தார். அன்று முதல் உமறுப் புலவர் எட்டையபுரத்து அரண்மனையை அலங்காரித்து வந்தார்.* * * * * * * *
தமிழகத்தில் ஆங்காங்கிருந்த முஸ்லிம் மக்கள் இலக்கிய ஆர்வத்துடன் கம்பராமாயணம், மகாபாரதம் போன்ற இலக்கியங்களின் உபந்நியாசங்களைக் கேட்டு வருவது அன்றைய வழக்கமாக இருந்தது.அக்காலத்தில்,இராமநாதபுரச் சேதுபதி மன்னாரின் அமைச்சராய் இலங்கி வந்த செய்கப்துல் காதிர் என்ற 'சீதக்காதி மரைக்காயர்'அவர்கள் இதனை உணர்ந்து,முஸ்லிம்கள் அவர்களின் மார்க்க அடிப்படையில் அமைந்த போரிலக்கியங்களின் உபந்நியாசங்களைக் கேட்கவேண்டும் என்ற பெருவிருப்பை உடையவராயிருந்தனர். தமது இவ்வேட்கையைத் தணிப்பதற்கான நல்வாய்ப்பை எதிர்நோக்கியும் காத்திருந்தார்.இவ்வாறிருக்கையில்,ஒருநாள் அரசாங்க வேலையின் நிமித்தம் சீதக்காதி மரைக்காயர் அவர்கள் எட்டயபுர அரசவைக்குச் செல்ல நேர்ந்தது.ஆங்கு உமறு என்ற பெயாரில் ஒரு புலவர் இருக்கக் கண்டு,'இவரே பெருமானாரின் வாழ்க்கையைக் காப்பியமாகப் பாட வல்லவர்'என்று ஓர்ந்தார். சின்னாட்கள் கழிந்த பின்னர் தமதில்லத்தில் நிகழ்ந்த விருந்தில் கலந்துகொள்ள உமறுப் புலவர் வந்த போது தமது உள்ளக் கிடக்கையை அன்னாரிடம் வௌரியிட்டார் சீதக்காதி வள்ளல்.புலவரும் இத்னை அடக்கத்துடன் ஏற்றுக்கொண்டார். எனினும்,வள்ளல் பெருமானாரின் வரலாற்றுச் செய்திகளை உரையாகத் தருவது யார் என்ற கேள்வி எழுந்தது.சீதக்காதி வள்ளல் தம் ஆன்மீக வழிகாட்டியான 'இறைநேசர் ஷெய்கு சதக்கத்துல்லாஹ் அப்பா'அவர்களை அணுகி,பெருமானாரின் வாழ்க்கைச் சாரிதையினைக் காவியமாகப் பாட உமறுப் புலவருக்கு உரை வழங்குமாறு கோரி நின்றார்கள்.உமறுப் புலவாரின் அலங்கோலத் தோற்றத்தைக் கண்டு,உரை கொடுக்க அப்பா அவர்கள் இசையவில்லை.உளம் வாடிய உமறுப் புலவர்,பெருமானாரின் வாழ்வைக் காவியமாக்கி, அதன் நிமித்தமாக அன்னாரைத் தாம் காணும் நாள் எந்நாளோ என்று ஏங்கி,பள்ளிவாயி லுக்குள் சென்றமர்ந்து தம் உள்ளத்து உணர்ச்சிகளைப் பாக்களாகப் பாடிக்கொண்டிருந்தார். இவ்வாறு எண்பத்தெட்டு பாடல்கள்* பாடி முடித்தபோது புலவரைத் துயில் ஆட்கொண்டது. பெருமானார்(ஸல்) அவர்கள், புலவாரின் கனவில் தோன்றி,மறுபடியும் அப்பா அவர்களிடம் சென்று உரை கேட்குமாறு பணித்தனர்.கண் விழித்த உமறுப் புலவர் கருணை நபியவர்களின் கட்டளையைச் சிரமேற்கொண்டு,அப்பா அவர்கலிடம் சென்று உரை கோரினர்.முன்போலன்றி, புலவரை எதிகொண்டழைத்து உபசாரித்த அப்பா அவர்கள்,சீறா உரை கொடுக்கச் சம்மதித்தனர்.அப்பா அவர்கள் தாங்களாகவும்,தம் மாணாக்கராகிய மஹ்மூது பந்தர் என்று வழங்க பெற்ற 'பறங்கிப் பேட்டையைச் சார்ந்த 'மாமூ நைனார் லெப்பை' என்பார் மூலமும் உமற்ப் புலவருக்கு உரை வழங்கினர்.அச்செய்திகளைக் கொண்டு சீறாக் காப்பியம் படைக்கத் தொடங்கினார் நம் புலவர்.இதற்கிடையில்,சீறாவைப் பாடப் பேருதவியாக இருந்த சீதக்காதி மரைக்காயர் அவர்கள் இறையடி சேர்ந்தனர்.காப்பியம் படைத்து வந்த உமறுப் புலவாரின் உள்ளத்தில் போரிடி விழுந்தது. அந்நிலையில், புலவாரின் இரங்க தக்க நிலையை உணர்ந்த 'அபுல்காசிம் மரைக்காயர்' என்ற வள்ளல் பெருமான்,புலவரை அன்புடன் ஆதாரித்து,சீறாவை இயற்றத் தாம் உறுதுணையாயிருப்பதாக வாக்களித்துப் பல உதவிகளும்செது ஊக்கினார். 'சீறாப்புராணம்"என்ற ஒரு பெருங்காவியம் உருவெடுத்தது. ஈடிணையில்லா இப்பேருதவி- களுக்கு நன்றி சொலும் முகத்தான், உமறுப் புலவர், அபுல் காசிம் மரைக்காயரைத் தம் சீறாப்புராணத்தில் பல இடங்களில் மறவாமல் நினைவு கூர்ந்து போற்றி புகழ்ந்துள்ளார்.உமறுப் புலவாரின் 'சீறாப்புராணம்'அண்ணல் பெருமானாரின் வாழ்க்கை முழுவதையும் கூறவில்லை என்பது, வியப்பிற்குாரியதும், வருந்தத் தக்கதுமாகும்!யாது காரணத்தாலோ சீறாவில் நபியவர்களின் வரலாறு முழுமையாகக் கூறப்பெறவில்லை. இருப்பினும், இஸ்லாமியத் தமிழிலக்கியங்களில் சீறாப் புராணத்திற்க்கு தனியோர் இடமுண்டு.பெருமானாரின் தூய திருவாழ்க்கையின் எஞ்சிய பகுதிகளை பனூ அகமது மரைக்காயர் யாத்து முடித்தார்கள்.இதுவும் 'சின்ன சீறா'என்ற பெயாரில் பிரபலமாகியுள்ளது.பண்டிதர்களிடையே ஓரளவு பழக்கத்தில் இருக்கும் சீறா,சாதாரண வாசகர்களிடையே நிலையான ஓர் இடத்தைப் பெறாமல் போனது வியப்பிற்குாரியதாகும்.சீறாவின் பிரதிகள் எளிதில் கிடைக்காமல் இருந்தது இதற்கு ஒரு முக்கிய காரணமாகும். பாடல்களில் விரவிக் கிடக்கும் அரபி,பார்சிச் சொற்கள்,படிப்போருக்கு மலைப்பைக் கொடுத்திருக்கலாம். இக்குறைகளை ஓரளவுக்குச் சாரிசெய்வதற்கு நாங்கள் முயன்றுள்ளோம். இப்பணியில் எங்களை ஈடுபடுத்திய வல்ல நாயனுக்கு மீண்டும் மனம்,மெய் மொழி ஆகியவற்றால் நன்றி கூறி அமைகிறோம். வஸ்ஸலாம்.

விலாதத்துக் விலாதத்துக் காண்டம்படலங்கள் 1-9 / பாடல்கள் (1- 596)
திருவுருவா யுணருருவா யறிவினொடுதௌரிவிடத்துஞ் சிந்தி யாதஅருவுருவா யுருவுருவா யகம்புறமுந்தன்னியிலா வடங்கா வின்பத்தொருவுருவா யின்மையினி லுண்மையினைத்தோற்றுவிக்கு மொளியா யாவுமருவுருவாய் வளர்காவன் முதலவனைப்பணிந்துள்ளி வாழ்த்து வாமே.
1திருவினுந் திருவாய்ப் பொருளினும் பொருளாய்த்தௌரிவினுந் தௌரிவதாய்ச் சிறந்தமருவினு மருவா யணுவினுக் கணுவாய்மதித்திடாப் பேரொளி யனைத்தும்பொருவினும் பொருவா வடிவினும் வடிவாய்ப்பூதலத் துறைந்த பல் லுயிரின்கருவினுங் கருவாய்ப் பெருந்தலம் புரந்தகருத்தனைப் பொருத்துதல் கருத்தே.1.1.1
2சிறந்தமெய்ப் பொருளை யழிவிலா மணியைத்தெரிந்துமுக் காலமு முணர்ந்துதுறந்தவ ரிதயா சனத்திருந் தவனைத்துடரின்ப துன்பமற் றவனைப்பிறந்தபல் லியிரின் மனத்தள வுறைந்துபிறப்பிறப் பென்றிலா தவனைமறந்தவர் சுவர்க்கப் பதியையு மறந்துமண்ணினின் மதிமறந் தவரே.1.1.2
3இருவிழி சிவந்து கனற்பொறி தெறிப்பவெடுத்தகைக் கதையினா லுறுக்கிவருமவ ரெதிர்நின் றொருமொழி கேட்பமறுமொழி கொடுத்திட வறியேன்தருமமும் பொறையு மறிவுமற் றறிந்துன்றன்னையு மென்னையு மறியப்பெருவரந் தருவா யாதிநா யகனேபேதியாச் சோதிமா முதலே.1.1.3
4கடலினை மலையைக் கதிர்மதி யுடுவைக்ககனமற் றறுஷொடு குறுசைப்புடவியைச் சுவனப் பதியினை யமரர்பொருந்திட மடுக்கடுக் கவையைவடிவுறத் தனது பேரொளி யதனால்வகுத்துவெவ் வேறென வமைத்தேயுடலினுக் குயிரா யுயிரினுக் குடலாயுறைந்தமெய்ப் பொருளினைப் புகல்வாம்.1.1.4
5வேறுஅருமறை தெரிந்துநீதி நெறிமுறை நடந்துதீனிவ்வகிலதல மெங்கு மீறவேயொருகவிகை கொண்டுமாறு படுமவரை வென்றுநாளுமுறுபுகழ் சிறந்த வாழ்வுளோர்திருவொளி வெனும்ஹபீபு நபிமுகம்ம தன்றுவானர்சிரமிசை நடந்து சோர்வுறாவிருசரண நம்பினோர்கள் வரிசைக ணிறைந்தபேர்களெவரினு முயர்ந்த பேர்களே.1.1.5
6வேறுகவியா லுரைத்தபுகழ் பெறுவார் மிகுத்தகவியடைவார் கலக்க மறவேசெவியார மெய்ப்பொருளை யறிவார் மனத்தினுறுசெயல்கே டகற்றி விடுவார்புவியார மொய்த்தநெறி மறைநாலினுக்குமொருபொறியா யுதித்த வடிவார்நவியார் சுவர்க்கபதி நயினார் பதத்துணையைநடுநாவில் வைத்த வர்களே.1.1.6
7வேறுஆதிதன் கிருபை தாங்கி யகிலமீ தரசு வைகித்தீதிலாச் சோதி போலத் தீன்பயிர் விளக்கஞ் செய்தேமூதறி வுடைய ரான முறுசலீன் களையெந் நாளும்போதர வுடனே போற்றிப் புந்தியின் மகிழ்ச்சி செய்வாம்.1.1.7
8வேறுதாரா தரத்தையே மேலே கவிக்கவேதாடாண்மை பெற்ற நயினார்பேரா யுதிக்கவே வானோ ருரைக்கவேபேறாய் விளக்கு முரவோராராய்வின் மிக்கபேர் நூறாயிரத்துநாலாறாயிரத்து நபிமார்மாராய மிக்கபேர் வாயார வைத்தபேர்வாழ்வார் சுவர்க்க பதியே.1.1.8
9வேறுபுரசைக் கடக்கரிக ணிரைதட் டற்க்குபிரர்புவியைப் படக்க டவியேசரகுற்ற நற்பதவி வழியிற் புகுத்தியுயர்தலைமைக்கு வைத்த பெரியோர்பிரசத் துளித்திவலை சிதறிக் கிடக்குமிருபிணையற் புயத்து நயினாரரசுக்கு வைத்தநெறி வரிசைக்கு மிக்கதுரையபுபக் கரைப்புகலுவாம்.1.1.9
10வேறுஅமரிலெதிர்த் தோர்களாவி யெமதிசையைத் தேடியோடவடருமடற் சூர வீரவேள்மமதைகெடச் சாதிநீதி முறைமைதனக் காகவோதுமகனைவதைத் தோரொ றாமலேதிமிரபகைப் பானுமேனி கருகிவிடப் பார்வையேவுதெரிமறையிற் கார ணீகனாருமறுதிருத் தாளைநாளு மனதினினைத் தோதுவோர்தம்முரியதவப் பேறு மீறுமே.1.1.10
11வேறுவிதுமாற வொளிவான வதனாதி நபிநாவில்விளைவான திரு வேதமேபதிவாக வொருசேக ரமதாக நிலமீதுபயிராக வுரை தூவினோர்சதுமாம றையினோர்கள் பெரியோர்கள் சிறியோர்கடமதாவி யென வாழ்வோருதுமானை யொருகாலு மறவாம லிருகாலுமுளமீது நினை வாமரோ.1.1.11
12வேறுபடிகிடு கிடெனநாக முடிநெறு நெறெனவாரிபடுதிரை யளற தாகவேவடவரை யசையாவான முகடுடை படவறாதமழைமுகில் சிதறி யோடவேயடையலர் கெடிகள்கோடி யிடிபடு படலதூளியலரியி னுடலின் மூழ்கவேநடமிடு கடினவாசி மிசைவரு சமரசூரநரர்புலி யலியை யோதுவாம்.1.1.12
13நலிவற வுலகநீதி நெறிமுறை பெருகநாளுநமருயி ரரிய காவலாயொலிகட லுலகமீது தெரிதர வரியதீனுமுறுகதி ருதைய மாகவேமலிபுக ழரசர்சீய மிர்கமத நறைகுலாவுமறைநபி மருக ராகிவாழலிதிரு மதலையான வசனுசை னுபயபாதமனுதின மனதி லோதுவாம்.1.1.13
14வேறுஆலகால வாரிபோலு மாகொடூர மாகியகாலகேள்வி தானடாத காரணீக ராளவேதாலமீதி லாதிதூதர் சாரமேவு வாழ்வினோர்நாலொடாறு பேர்கள்பாத நாவினாளு மோதுவாம்.1.1.14
15வேறுஆத மீன்றமனு நீதி யாண்டமுறையாலு மோங்குபுக ழாகினோர்தூத ராங்கடவு ணாவி லாய்ந்தமறைதூவி நான்கு மத்க பாகினோர்நீத வான்களுறு போத வான்கள்குருநேர்மை யாந்தகைமை யாகினோர்வேத வான்களெனு நாலிமாம்கள்பதமேலு மியாம்புகல வேணுமே.1.1.15
16வேறுஉரமுறு தீன்பா ரெல்லா மொளிரவே விளக்கஞ் செய்யுந்துரமுறு மவுலி யாவாய்த் தோன்றின பேர்க்கு மேலாம்வரமுறு முகியித் தீன்செம் மலரடி யிரண்டு மென்றன்சிரமிசை யிருத்தி வாழ்த்திச் செந்தமிழ்ப் பனுவல் செய்வேன்.1.1.16
17நம்மையா ளுடையான் வேத நபிதிரு வசனந் தீனோர்சம்மதித் திடப்பா ரெல்லாந் தழைக்கவே விளக்கஞ் செய்தோரிம்மையு மறுமை யும்பே றிலங்கிய சதக்கத் துல்லாசெம்மல ரடியி ரண்டுஞ் சிந்தையி லிருத்தி னேனே.1.1.17
18அவையடக்கம் வேறுதிக்க னைத்தினும் பாரினுந் தீவினுஞ் செங்கோற்புக்க நன்னெறித் திகிரிமன் னவர்கண்முன் பொருந்தக்தக்க கூலியுஞ் செய்துண வறிகிலான் சரிபோன்மிக்க செந்தமிழப் புலவர்மு னியான்விளம் புவதே.1.1.18
19படித்த லத்தெழு கடல்குல கிரிநிலை பதறவெடுத்து வீசிய சண்டமா ருதத்தினுக் கெதிரேமிடித்து நொந்தசிற் றெறும்பொரு மூச்சுவிட் டதுபோல்வடித்த செந்தமிழ்ப் புலவர்மு னியான்சொலு மாறே.1.1.19
20அடிய டித்தொறும் வழுவலால் விதிவிலக் கறியேன்படிப டித்தசெஞ் சொற்புல வோர்முனம் பகர்தலிடியி டித்திடு மாரவா ரத்தினுக் கெதிரோர்நொடிநொ டிப்பது போலுமொத் திருந்தென் நூலே.1.1.20
கடவுள் வாழ்த்துப் படலம் முற்றிற்று.
21தருங்கொடை நயினார் கீர்த்தி சகமெலாம் பரந்து மிஞ்சிநெருங்கியே விசும்பி லண்ட முகடுற நிறைந்த வேபோலிருங்கண வெள்ளை மேக மிரைபசுங் கடல்வீழ்ந் துண்டோர்கருங்கட லெழுந்த தென்னக் ககனிடைல் செறிந்து மீண்ட.1.2.1
22வேறுஅகில மெங்கணுந் திடுக்கிட வாய்திறந் ததிர்ந்துமிகும ழைக்குல மடிக்கடி விழிப்பபோன் மின்னிக்ககன மெண்டிசை யடங்கலும் பரந்துகா லூன்றிச்சிகர பூதர மறைதரச் சொரிந்தன செருமி.1.2.2
23அதிரு மாமழைத் துளியிடை யிடையணி யணியாய்முதிரு மிந்திர கோபமு மாலியு முதிர்ந்தகதிர்செய் முத்தமு மாணிக்க ராசியுங் கலந்தேயுதிரும் வண்ணமொத் திருந்தன கிரியொருங் கொருங்கே.1.2.3
24பம்மி யெங்கணும் பொழிதரு சாரல்வாய்ப் பட்டுக்கம்மி னத்தக டுறக்கொடு கியகுளிர் கலக்கமும்ம தக்கரி களுமரி களுமுர ணறவேசம்ம தித்தொரு புடைகிடப் பனவெனச் சாரும்.1.2.4
25தந்தி மான்மரை யணில்கொடு வரிதக ருடும்புமந்தி சிங்களங் கவரிமா வழுங்குதே வாங்குமுந்து மான்மத மெண்குசெந் நாய்பணி முண்மாநந்தி மிஞ்சிய விலங்கினங் கொடுகிமெய்ந் நடுங்கும்.1.2.5
26வேங்கை சந்தனஞ் சண்பகம் நெல்லிவெய் தான்றிகோங்க சோகுதேக் காசினி பாடலங் குறிஞ்சிநாங்கு காரகில் குங்கும மிலவு நாரத்தைதாங்கும் வேரற வரையொடு வரையிடை சாய்க்கும்.1.2.6
27விலங்கி னங்கடங் குலத்தொடுங் குழுவொடும் வெருட்டிக்கலங்கு மஞ்சிறைப் பறவைக ளைனைத்தையுங் கலைத்தேயிலங்கு பைங்கனி சிதறிடத் தருக்களை யிடறிநலங்கொள் பைங்கதிர்க் கிரியிடை சரிந்தன நாரம்.1.2.7
28வேறுவரிவிழிச் செவ்வாய்க் குறத்திய ரிதணுமனையையுந் தினையையும் வாரிப்புரிநரம் பிசையாழ் தொண்டகப் பறையும்பொடிபடத் துறுகலின் மோதிவிரிதலைக் குறவர் குழாத்தொடும் வெருட்டிவிளைந்தமுக் கனிசத கோடிசரிதர வீழ்த்தி மரகதக் கிரணத்தடவரை யருவிகொண் டிறங்கும்.1.2.8
29மலையெனு மரசன் புயங்களைத் தழுவிமகிழ்ச்சிசெய் தவனுழைச் சிறந்தநிலைகெழு பொன்னு முரகசெம் மணியுநித்தில ராசியுங் கவர்ந்துதொலைவிலாப் பண்ட மனைத்தையும் வாரிச்சுருட்டியே யெல்லைவிட் டகலும்விலைமகள் போன்று பலபல முகமாய்வெள்ளரு வித்திரள் சாயும்.1.2.9
30வேறுதாது குத்துவண் டார்த்தெழத் தருத்தலை தடவிவீதி வாய்நுரை தரவரு பாகெழ வீசிக்காது மாகளி றெனநதி கழைக்கடங் காதுமோதிக் காலினா லெற்றியே யணையிட முறிக்கும்.1.2.10
31பரந்த வெண்ணுரைத் துகிலுடுத் தறற்குழற் பரப்பிவிரைந்து பாய்கயல் விழியெனத் திரைக்கரம் வீசிச்சுரந்த புற்புதத் தனத்துடன் சுழியுந்தி தோற்றப்பொருந்து மானதி விளங்கிழை மகளிரைப் போலும்.1.2.11
32கிடந்த சந்தனங் காரகில் கிளைமணி கரிக்கோடுடைந்த முத்தம்வெண் டந்தமுச் சுடரொளி யொதுங்கக்கடந்த செம்மணிப் பையுடன் கொடுகட லேறநடந்த வாணிக னொத்தது செழுங்கழை நதியே.1.2.12
33வேறுஇத்தகைக் குறிஞ்சி நிலத்தினைக் கடந்தேயெரிதழற் பாலையிற் புகுந்துமைத்தடங் கூந்தற் கருவிழிச் செவ்வாயெயிற்றியர் வயிறலைத் தேங்கக்கைத்தலத் தேந்து குழந்தையுஞ் சிறாரும்வேடர்தங் கணத்தொடும் வெருட்டிமுத்தணி சிறப்ப விருகரை கொழித்துமுல்லையிற் புகுந்தது சலிலம்.1.2.13
34பாறயிர் நறுநெய்க் கலத்தொடுங் கலக்கிப்பட்டியுங் குட்டியுஞ் சிதறிச்சூறையிட் டுதறி நெய்முடை கமழுஞ்சுரிகுழற் றொறுவிய ருடுத்தகூறையுங் குழலுங் குடுக்கையுந் தடுக்குங்கொண்டெடுத் தவர்நிரை சாய்த்துவேறரை யரைப்போற் பெருவளங் கவர்ந்துமருதத்திற் பரந்தன வெள்ளம்.1.2.14
35வேறுகன்னன் மானதி வெண்டிரை நுரைகரை புரளத்தென்னி லைப்பகுப் பாகிய காலெலாஞ் செருமியன்ன மென்சிறைப் பெடையொடுங் குடம்பைவிட் டகலத்துன்னு மேரியுந் தடங்களு நிறைந்தன தோயம்.1.2.15
36அலையெறி ந்திரை கடலென வருநதி யதனைத்தொலைவின் மள்ளர்கள் குளந்தொறும் புகுத்திய தோற்றங்கொலைம தக்கரிக் குழுவினை வயவராய்க் கொடுபோய்நிலைத ரித்திடும் படுகுழிப் படுத்தவை நிகர்க்கும்.1.2.16
37தடமு மேரியும் வாவியுங் கழனியுஞ் சலசக்கிடங்கு மெங்கணு நிறைதரப் பெருகுகீலாலங்குடம்பை யின்பல பேதமா கியசத கோடியுடம்பு தோறினு முயிர்நின்ற நிலையினை யொக்கும்.1.2.17
38வேறுஏரியை யுடைத்துக் குளங்கரை தகர்த்தேயிடிபட வணையினை முறித்துச்சேரியுட் பரந்து கொல்லையுட் புகுந்துசெழுங்கருப் பாலையைச் சாய்த்துவேரியஞ் சலசக் கழனியைச் யுழக்கிவிரிதலை யரம்பையைத் தள்ளிவாரியிற் செறித்து பணையெலா நிரப்பிமட்டிலா மலிந்தன வனமே.1.2.18
39வேறுஅலையெ றிந்திரு கரைவழி யொழுகுகம் பலையுங்கலையும் வெள்ளனஞ் சிறைவிரித் தசைத்த கம்பலையுமலைதி றந்தன மதகின்வாய் வழிந்தகம் பலையுஞ்சிலைத ரித்தபே ரொலிபெரும் படையொலி சிறக்கும்.1.2.19
40முறைமு றைக்கிணைப் பறையொலி கடலென முழங்கநிறையுஞ் சேரிவிட் டெழுந்தன ருழவர்க ணெருங்கிச்செறிக டக்களி றினமென வயின்வயின் றிரண்டுமறிபு னற்கரை யிடந்தொறுஞ் செறிந்தனர் மலிந்தே.1.2.20
41மட்டு வாய்வயி றாரவுண் டெண்ணிலா மள்ளர்கொட்டு வாங்கியே யிருபுயங் குலுங்கிடக் கரண்கள்வெட்டு வார்சிலர் மென்கரத் தேந்தியே வரம்புகட்டு வாரடைப் பார்திசை தொறுங்கணக் கிலையே.1.2.21
42வேறுதெரிபொறி முகட்டுக் கவட்டடி யலவன்சிதைந்திடக் கமடமுள் ளழுந்தவரிவளை நெரிய வலம்புரிக் குலத்தின்வயிற்றிடை கொழுமுகந் தாக்கிவிரிகதிர்த் தரள மணிபல வுகுப்பவெருண்மதக் கவையடிப் பேழ்வாய்நிரைநெறி மருப்புக் கரும்பக டிணக்கிநீள்வய லெங்கணு முழுதார்.1.2.22
43முள்ளரைப் பசுந்தாள் வட்டிலைக் கமலமுகையுடைந் தொழுகுதேன் றெறிப்பக்கள்ளவிழ் குவளை யொருபுறஞ் சரியக்கடிமலர்க் குமுதமு மடியமள்ளர்கார் சேற்றி லிடறிய பதுமமணியின மலரளி யெழுப்பவெள்ளநீர் பரப்பு கழனிக டோறுமென்கருஞ் சேறுசெய் தனரே.1.2.23
44சுந்தரப் பொறியஞ் சிறையறு காலேழிசையளி தொகுதியிற் கூடிமந்தர மனைய தருவின்மேல் வீழ்ந்துவாய்விட முழங்கிய வோதைகொந்தெறி கமலங் குமுதஞ்செங் கழுநீர்குடியொடு மடிந்தன வினிமேலந்தர மலது வேறிட மிலையென்றழுகுரன் மயங்குவ போலும்.1.2.24
45சுரும்பின மிருந்து தேனுண்டு தெவுட்டிச்சுருதிசெய் பன்மலர் சிறந்தவிரும்படி கிடங்கிற் கிடந்துமூச் செறிந்தவெருமையின் கவையடிப் பரூஉத்தாணிரம்பிடப் பதிந்த சலஞ்சலத் தரளநீணிலா வெறிப்பது நிறைந்தகரும்பொறிக் கவைநாத் துளையெயிற் றரவுகவ்விய கதிர்மதி போலும்.1.2.25
46கலன்பல வணிந்து தொண்டியுண் டெழுந்துகதிரவன் றனைக்கையாற் றொழுதுகுலந்தரு தெய்வ வணக்கமுஞ் செய்துகுழுவுட னுழுநர்கள் கூண்டுநிலந்தனை வாழ்த்தி வலக்கரங் குலுக்கிநென்முளை சிதறிய தோற்றம்பொலன்பல சிறப்ப விடனற நெருங்கிப்பொன்மழை பொழிவது போலும்.1.2.26
47படர்மருப் பெருமைக் குடம்புரை செருத்தற்பருமுலைக் கண்டிறந் தொழுகிநடைவழி சொரியு மமுதமும் வாழைநறுங்கனி யுகுத்தசெந் தேனுமுடைபடு பனசப் பசுங்கனிச் சுளையிலூற்றிருந் தோடிய தேனுங்கடிமலர் போர்த்த வரம்பினைத் தகர்த்துக்கழனியிற் பரந்துபாய்ந் துடைக்கும்.1.2.27
48அருமறை நெறியும் வணக்கமுங் கொடையுமன்புமா தரவுநல் லறிவுந்தருமமும் பொறையு மிரக்கமுங் குணமுந்தயவுஞ்சீ ரொழுக்கமு முடையோர்பெருகிய செல்வக் குடியொடு கிளையும்பெருத்தினி திருந்துவாழ் வனபோன்மருமலர்ப் பழனக் காடெலா நெருங்கிவளர்ந்தது நெல்லிலை நாற்றே.1.2.28
49கோதற வெழுந்த நாற்றினைப் பறித்துக்குவித்திடு முடியிட மடுத்துக்தீதுறுங் கருங்கட் செய்யவாய் வெண்பற்சிற்றிடைக் கடைசியர் வாரிப்பூதர மனைய சுணங்கணி முலையிற்புள்ளியிற் சேதகம் போர்ப்பவாதரம் பெருகி நிரைநிரை வடிவாயணியணி நாற்றினை நடுவார்.1.2.29
50கையினிற் செறிந்த முடியினைச் சிதறிக்கடைசியர் கரங்கடொட் டொழுங்காய்ச்செய்யினிற் பதிப்பத் துளிகருஞ் சேறுதெறித்திடுஞ் செழுமுகச் செவ்விதுய்யவெண் டிரைப்பாய் சுருட்டிமே லெறியுந்தொடுகடன் முகட்டிடை யெழுந்துவையகஞ் சிறப்ப வருமுழு மதியுமறுவுமொத் திருந்தன மாதோ.1.2.30
51பனைமதுத் தேக்கி யிருவிழி சேப்பப்பைங்கழை நிகர்த்ததோ ளசையவனநடை சிதையச் சேவடி பெயர்த்திட்டள்ளலஞ் சேற்றிடை நடுவோர்சினமத கரிக்கோ டெனுமுலைத் தடத்திற்சேதகந் தெறிப்பது திரண்டவனசமென் முகையிற் பொறிவரி யறுகால்வண்டுமொய்த் திருப்பது போலும்.1.2.31
52முற்றிழை கிடந்த முலைக்குவ டசையமுகிறவழ் கருங்குழ னெகிழச்சிற்றிடை யொசிய மதிமுகம் வெயர்ப்பச்சேற்றிடை நாற்றினை நடுவோர்பற்றுமென் கரத்திற் கரும்பொனின் கடகம்பசியநெற் பயிரொளி பாயமற்றெனை யுரைப்ப விரிகதிர் பரப்புமரகதக் கடகமொத் திருந்த.1.2.32
53வெறிமது வருந்தி மரகதக் கோவைமென்பிடர் கிடந்துருண் டசையக்கறுவிய மனத்தோ டினத்தொடு மிகலிக்கடைசியர் களிப்பொடு தவளச்சிறுநகை தரளப் பவளமெல் லிதழிற்செழுமலர்க் கைவிரற் குவித்துக்குறிகுரற் குரவை கூன்பிடர்ப் பேழ்வாய்க்குடவளைக் குரவையோ டிகலும்.1.2.33
54கூந்தலம் பிடிமா மென்னடை பயிலுங்குடமுலைக் கடைசியர் செழுங்கைக்காந்தண்மெல் விறர்குங் கடுவரி விழிக்குங்கடைந்திணைக் கியகணைக் காற்குஞ்சேந்திணை பொருவா தினமென வெருவிச்செங்கயல் வரிவராற் கௌரிறுபாய்ந்தயல் போய வனத்திடை யொளித்துப்பங்கமெய் படப்பயப் படுமே.1.2.34
55குருகின மிரியப் புள்ளினம் பதறக்கொக்கினம் வெருவிட வெகினம்விரிமலர்க் கமலப் பாயல்விட் டகலமென்சிறைப் பேட்டனந் துடிப்பச்சொரிமதுத் துளித்துக் குவளையாய் சிதறச்சுருட்டிவால் விசைத்திடத் துள்ளிவரிவராற் பகடு வளைநில வெறிக்குமடைத்தலைக் கிடந்துமூச் செறியும்.1.2.35
56வரிசையிற் செறிந்த நிரைபசுஞ் சாலிவளர்கிளைக் கிளையெனக் கிளைத்துப்பெருகுசூன் முதிர்ந்தீன் றாரமு துறைந்துபிடர்குனி தரக்குலை சேந்துசொரிகதிர்ப் பவள நிறம்பல படைத்துச்சுடர்மணி முத்தினந் தெறிப்பத்தரையினிற் படிந்தே யருட்கை சுரந்ததருவினம் வெருவிடக் கிடக்கும்.1.2.36
57கொத்தலர் சூடி யரைத்துகி லிறுக்கிக்குடமதுக் கைமடுத் தருந்திமைத்தவழ் கனகக் கிரிப்புயந் திரண்டமள்ளர்கள் வனப்பினுக் குடைந்தசித்தசன் கரவாட் பறித்ததை வளைத்தசெயலெனப் பிள்ளைவெண் பிறைவாட்கைத்தலத் தேந்திக் கழனியிற் புகுந்துகதிரரிந் தரிநிரை யிடுவார்.1.2.37
58திருந்திய வரியைக் கொடுங்கையிற் கிடத்தித்திரைசெய்து சும்மையிற் சேர்த்துக்கருந்தடங் கூந்தற் செவ்வரி வேற்கட்கடைசியர் குழாத்தொடுந் திரண்டுவிரிந்தசெங் கமலக் கரம்பல வருந்தவிசித்திறுக் கியசுமை யேந்திப்பொருந்திய வரப்பி நெறிகடைக் கதலிப்புலியடிக் குலைத்தலை சாய்க்கும்.1.2.38
59அசைந்தசிற் றிடைமென் கொடிவருந் திடநீளணிவட மார்பிடைப் புரளப்பசுங்கிளிப் பரிவேள் படையெனத் திரண்டகடைசியர் சுமையெலாம் பரப்பியிசைந்திட நிறைத்துக் குவித்தநெற் போர்களெங்கணு மிலங்கிய தோற்றம்விசும்பினைத் தடவ வரைசத கோடிவீற்றிருந் தனவெனச் சிறக்கும்.1.2.39
60கார்த்தடக் களிற்றின் வனப்பினை யழித்தகருங்கடா வினம்பல விணைத்துப்போர்த்த்லை திறந்து திரித்துவை நீத்துப்பொன்னிறச் செந்நெல்லைக் குவித்துச்சேர்த்திடுஞ் சகடந் தொறுந்தொறு மியற்றித்திரண்மனை வயின்வயின் செறிப்பாரார்த்தபே ரோதை யினமணி கொழிக்குமறைதிரைக் கடலினைப் பொருவும்.1.2.40
61செந்நெலிற் பெருக்கின் கனைகுரற் சகடந்திசைதொறு மலிந்தன செருக்குங்கன்னலங் கழனி புகுந்தறுத் தடைந்தகளமர்க ளொலிகுரற் செருக்குந்துன்னுபூங் கமுக சிதறுசெம் பழுக்காய்சுமப்பவர் கம்பலைச் செருக்குமன்னவன் வகுதைத் துரையபுல் காசீம்வளமனைச் செருக்குமொத் திருக்கும்.1.2.41
62வேறுகால வட்டவாய் முளரியி லூறுகள் ளருந்திக்கோல வட்டவஞ் சிறையளி குழுவுடன் பாடுஞ்சோலை வட்டவாய் மயிலினஞ் சூழ்ந்துகார் நீலவால வட்டமொத் திருந்தமென் சிறைவிரித் தாடும்.1.2.42
63அரக்கெ றிந்தசெவ் வாம்பல்வா யணியிழை மடவார்நெருக்கி யிட்டகாற் சிலம்பொலி விசும்புற நிமிரவிருக்கும் வாவியுட் பெடையன மிடர்கொலென் றிரங்கித்தருக்கி ழந்துதன் சேவல்வாய்த் தொனியெனத் தயங்கும்.1.2.43
64நலங்கொ டாமரை முகமலர் தரநறுங் குவளைவிலங்கி வள்ளையில் விழியெனக் கிடப்பமெல் லரும்புதுலங்கு மென்முலை தோன்றிடப் பச்சிலைத் துகில்போர்த்திலங்கு வாவிக ளணியிழை மகளிரொத் திருந்த.1.2.44
65நிரைந்த சண்பகம் பாடலந் தடக்கரை நிரம்பச்சொரிந்த பன்மலர் மீதினில் வரியளித் தோற்றமெரிந்தி லங்குபொற் கரையினை யிரும்பினா லிறுகப்பரிந்த றைந்தசுள் ளாணியின் புறமெனப் பரந்த.1.2.45
66தோட விழ்ந்துபூந் தாதுகக் குடைந்தினைச் சுரும்புபாட வாவியு ளிளநிலாத் தோற்றிய பான்மைசாடும் வார்புன லலைதரத் திரைகளிற் றத்தியோட மோடுவ தொத்திருந் தனவென வொளிரும்.1.2.46
67வாய்ந்த மெல்லிழை மடந்தையர் தடத்தின்மெய் வருந்தத்தோய்ந்து நீர்குடைந் தாடுவோர் மதிமுகத் தோற்றஞ்சேந்த கஞ்சமுங் குவளையு மெனவெழில் சிறந்தகூந்தல் வெண்டிரைக் கடலிடை முகிலெனக் குலவும்.1.2.47
68திருந்து மெல்லிழை மடந்தையர் புனலிடை திளைப்பச்சரிந்த கூந்தலி லிருந்தவண் டெழுந்துபூந் தடத்தில்விரிந்த காவியில் வீழ்வது மின்னனார் விழிக்குப்பொருந்து மோவெனச் சினத்துட னுதைப்பது போலும்.1.2.48
69மறிந்து தூங்கிய நாவலின் கனியையோர் மங்கையெறிந்து பார்மது கரத்தினைக் கரத்தினா லெடுப்பப்பறிந்து போதலிற் றுணிக்கின்கை யுதறிமெய் பதறிச்செறிந்து சூழ்தரச் சொரிந்தமைக் கனியையுந் தீண்டாள்.1.2.49
70கரிய மைவிழி மங்கையர் பூங்குழற் காட்டிற்சொரியு மென்மலர்த் தாதுக்க ளுதிர்ந்தன சுடர்மின்விரியு மெல்லிழைப் பூணொடு பூண்பல மிடைந்துபொருது ரிஞ்சதிற் பொற்பொடி யுதிர்வன போலும்.1.2.50
71பிடித்த கொம்பிருந் தோடிமுட் குடக்கனி பிடித்துக்கடித்த போதினிற் காம்பறக் கனியுடன் கவியும்படித்த லத்தினில் வீழ்ந்திடப் பதறிமெய் பதைத்துத்துடித்துத் தன்னுயிர்க் கடுவனை யணைத்துட றுணுக்கும்.1.2.51
72தாறு கொண்டபைங் கதலிதே மாப்பலாத் தருத்தேனூறு கொண்டசெங் கனிசிறு கிடங்கிடை யுகுப்பச்சேறு கொண்டதிற் கிடந்திருள் செறிகரு மேதிவேறு கொண்டுபொன் மேதியின் குலமென விளங்கும்.1.2.52
73கள்ள விழ்ந்தபூம் பொய்கையிற் புள்ளினங் கலையத்துள்ளு மேல்வரிக் கயலுண்டு நாரைகண் டூங்குமுள்ள மன்புறச் சேவலின் சிறைநிழ லொதுங்கிவெள்ள னப்பெடை தாமரைத் தவிசில்வீற் றிருக்கும்.1.2.53
74ஏல வார்குழற் கிடுபுகை மஞ்சினோ டிகலுஞ்சோலை வாய்தொறு முக்கனித் தேன்மழை சொரியுமாலை வாய்தொறுங் கரும்புடைத் தாறெடுத் தோடுநீல வாய்மலர் வாவிகள் பெருங்கட னிகர்க்கும்.1.2.54
75தெருளு றும்படி தேன்றுளி தெறித்திடச் சிதறிப்பொருத லைத்திடு மாங்கனி தேங்கனிப் பொழிலேமரும ணம்பெறுஞ் சந்தகில் சண்பக வனத்திற்றருவே னும்பெயர் பெறச்சிறந் தீந்திருந் தனவே.1.2.55
76வேறுநினக்கும்பொற் பொருளே நிந்தனை மற்றோர்நிந்தனை சிந்தனை யிலையேயினக்கருஞ் சுரும்பு மதுத்துளி யருந்துமிவையலான் மதுப்பிறி திலையேசினக்கரி முனைக்கோட் டிளமுலைப் புலவிதிருத்தும்பொய் யலதுபொய் யிலையேவனக்கனி கறுத்த குலைக்கள வலதுமறுத்தொரு கொலைக்கள விலையே.1.2.56
நாட்டுப் படலம் முற்றிற்று.
77நிலங்க ளேழுக்கு நாவலந் தீவுகண் ணிகர்க்குநலங்கொ டீவுக்குக் கண்மணி யறபுநன் னாடேபுலன்கொள் கண்மணிக் குள்ளுறை யுயிரெனப் பொருந்தியிலங்கு மக்கமா நகர்வளஞ் சிறிதெடுத் திசைப்பாம்.13.1
78வேறுவிரிகதி ரெறித்த மணிவளை யுகுப்பவிரிதிரை யகழெனுந் தடத்திலெரிசைகைக் கிரணப் பதுமமா மணியினினம்பல சூழ்ந்திருந் திலங்கப்புரிமுறுக் கவிழ்ந்த பொன்னிதழ்க் கமலம்பூத்திருந் ததுவெனப் புரிசைதெரிதரச் சிறந்து செல்வமுஞ் செருக்குந்திகழ்தர வீற்றிருந் ததுவே.13.2
79வடவரைப் புடைசூழ் நிலத்தெழு தீவும்வரவழைத் தொருதலத் திருத்தித்தடமுடிக் கிரணத் திகிரிமால் வரையைச்சதுர்தரப் புரிசையாய் நிறுத்தியிடனற நெருங்கும் பெரும்புபுறக் கடலையிதற்கக ழெனப்பெய ரிட்டுப்படவர வரசன் றிருமுடி மணியைப்பதித்தது மக்கமா நகரம்.13.3
80கானகத் துறையும் வயிரவொண் கதிரோகடல்படு நித்திலக் கதிரோதேனவிழ் பதும மணிக்கதி ரதுவோசிறந்திடு மக்கமா நகரில்வானவர்க் கிறைவன் ஜபுறயீல் பலகால்வந்தவர் மெய்யொளி பாய்ந்தேயீனமி னகரஞ் செழுங்கதிர் பரப்பியிருப்பது பிறிதுவே றிலையே.13.4
81சரிகதி வேக மாருதஞ் சிதையத்தாவிய புரவியி னொலியுநிரைமணி யுருட்டுப் பசுங்கதி ரிரதநெருங்கிட நடத்துபே ரொலியுமுரலடிச் சிறுகட் பெருமதப் பிறைக்கோட்டொருத்தலி னிடிமுழக் கொலியும்விரிதிரைக் கரங்கொண் டறையுவாப் பெருக்கும்வெருக்கொளத் தெருக்கிடந் தொலிக்கும்.13.5
82மின்னிடை நுடங்கச் சிலம்பொலி சிலம்பமேகலைத் திரண்மணிக் கதிர்செம்பொன்னொடு மிலங்க மறுகிடைப் புகுந்தபுனையிழைப் பிடிநடை மடவார்மன்னிய பதத்தி னலத்தக நிலத்தில்வரிபடக் கிடப்பன சிறந்ததுன்னிதழ்க் கமலப் பதத்தினை நிகர்ப்பச்சுவட்டடி தொடர்வன போலும்.13.6
83கண்ணகன் ஞாலம் விலைசொலற் கரியகலைபல நிரைத்தலாற் பணியாற்றண்ணெனக் குளிர்ந்து பிறவுரு வமைத்துத்தரும்படி மக்கலப் பெருக்கான்மண்ணினிற் சிறந்த நகர்த்திர வியத்தான்மரக்கலத் திறக்கிய சரக்காலெண்ணிறந் தெழுநல் வளம்பல படைத்தங்கிருந்தது கடைத்தெருத் தலையே.13.7
84மான்மதக் குவையுஞ் சந்தனத் தொகையுமணிக்கருங் காழகிற் றுணியும்பான்மதிக் குழவிக் குருத்தெனக் கதிர்கள்பரப்பிய மதகரி மருப்புந்தேனமர்ந் தொழுகுங் குங்குமத் தொகையுஞ்செறிதலா லுயர்ச்சியால் வளத்தாலீனமி லிமயப் பொருப்பெனப் பணைத்தங்கிருந்தது கடைத்தெருத் தலையே.13.8
85தந்தியின் குழுவுங் குரகதத் திரளுந்தடவரை பொருவுதேர்க் கணமுஞ்சிந்துரப் பிறைநன் னுதற்கருங் கூந்தற்செவ்வரித் தடங்கண்ணார் நெருக்கும்வந்தவர் நினைத்த பொருளுமா ரமிர்தும்வகைவகை தருதலான் மணியுமிந்திர தருவும் வறிதென மதர்த்தங்கிருந்தது கடைத்தெருத் தலையே.13.9
86நிரைத்தபைங் கதிரார் மரகத மணியானீணிலாக் கருப்புரத் தகட்டாற்பருத்தசங் கினத்தால் வலம்புரிக் குலத்தாற்படர்கொடித் திரட்பவ ளத்தால்விரித்தவெண் ணுரைபோல் வெண்டுகி லடுக்கால்விரைசெறி யம்பரின் றிடராலிரைத்தபே ரொலியாற் பெருங்கட னிகராயிருந்தது கடைத்தெருத் தலையே.13.10
87பைங்கடற் பிறந்து வணிகர்கை புகுந்தபருமணி நித்திலக் குவையுந்தங்கிய கிரண வனசமா மணியுந்தயங்கொளி வயிரரா சிகளுஞ்செங்கதி ரெறிக்கு மிரவியு மமுதச்செழுங்கதிர் மதியமு முடுவுமிங்கிவண் குடிபுக் கிருந்தது போன்றுமிருந்தது கடைத்தெருத் தலையே.13.11
88அணிபெற வொழுங்காய் வயின்வயின் றிரண்டவகிற்புகை முகிலின மெனவுங்குணில்பொரு முரசப் பெருங்குரல் கிடந்துகுழுமிவிண் ணேறொலி யெனவுமணிவளைத் தடக்கைத் துவரிதழ் கனத்தவனமுலை மின்கண்மின் னெனவுந்தணிவில நிவந்த செழுங்கதிர் மாடந்தமனியக் கிரியினோ டிகலும்.13.12
89வெண்ணில வெறிக்கு மிரசதத் தகடுவேய்ந்தமே னிலைவயின் செறிந்துபண்ணிருந் தொழுகு மென்மொழிக் குதலைப்பாவையர் செழுங்குழல் விரித்துநண்ணிய துகிலுங் கமழ்தர வூட்டுநறும்புகை சுருண்டெழுந் தொழுங்காய்விண்ணினிற் படர்வ தேணியொன் றமைத்துவிசும்பினுக் கிடுவது போலும்.13.13
90அடுசெழும் பாகுந் தேனுமா ரமிர்துமனத்தொடு மனத்தொடுந் திருந்தியிடனற விருந்து விருந்தொடு நுகர்வோர்மனையிட மெண்ணினை மறைக்குங்கடுவினை யடர்ந்த கொடுவினை விழியார்கறைதவிர் மதிமுகங் கண்டோபடர்தரு மாடக் குடுமியின் விசித்தபசுங்கொடி மதிமறுத் துடைக்கும்.13.14
91தேங்கமழ் சுருதி வரிமுறை படர்ந்துதிகழ்தரு நித்திலக் கொடிகளோங்கிட மாடக் குடுமியி னடுநின்றுலவிய திரவினும் பகலும்வீங்குசெங் கதிரி னிரவியுந் தவளவெண்கதிர் மதியமும் விலகிப்பாங்கினிற் புகுமி னெனக்கர மசைத்தபான்மையொத் திருந்தன மாதோ.13.15
92வேறுமானை யன்னகண் மடந்தையர் வதுவையின் முழக்குஞ்சேனை மன்னவர் படைமுர சதிர்தெரு முழக்குந்தான மிந்நகர் முதலெனச் சாற்றிய முழக்குஞ்சோனை மாமழை முழக்கென வைகலுந் தொனிக்கும்.13.16
93வீதி வாய்தொறு மிடனற நெருங்கிய மேடைச்சோதி வெண்கதி ரந்தரத் துலவிய தோற்றநீதி மானபி பிறந்தநாள் விண்ணவர் நெருங்கிக்கோதில் பொன்னகர் திறந்தவாய்க் கதிரெனக் குலவும்.13.17
94மன்ற லங்கம ழகழ்புனை சுதைதிகழ் மதிளானின்றி லங்கிய கணமணிக் கொடுமுடி நிரையான்முன்றி லெங்கணு மசைதரு கொடிநிறை முறையாலென்று மிந்நகர் பொன்னக ரென்பதொத் திடுமே.13.18
95பட்ட முற்றிடு நபிகளால் விண்ணவர் பரிவாற்கட்டு பேரொளிக் ககுபத்துல் லாவிருக் கையினான்மட்டு வார்குளிர் சோலையான் மலிந்தபொன் னுலகமெட்டு மொன்றெனத் திரண்டுவந் திருந்ததொத் திருக்கும்.13.19
96தெரிந்த செவ்வியர் முறைவழி தௌரிந்தவர் செந்நூற்சொரிந்த நாவினர் முதியவர் திரண்டசொல் லோதையெரிந்த செங்கதி ரிலங்கிய பள்ளிக ளெவையும்விரிந்த வாய்திறந் தோதுவ போன்றன வேதம்.13.20
97சந்திர காந்திசெய் பலகையை மடிமிசை தரித்தேயிந்திர நீலமொத் திருந்தமை தோய்த்ததி லெழுதிமந்திர மாமொழி மறைபயி லிளையவர் நெருங்கியெந்த வீதியு முழங்குவ திவையலா லிலையே.13.21
98மறையின் மிக்கவ ரோதிய வோசையும் வரிசைத்துறவின் மிக்கவர் திக்கிறி னோசையுஞ் சூழ்ந்தேயிறைவ னைத்தொழு திருகையு மேந்திய வாமீன்முறைமு றைப்படிக் கூறிய வோசையு முழங்கும்.13.22
நகரப்படலம் முற்றிற்று.
ஆகப் படலம்3-க்குத் திருவிருத்தம் 98.1.4.
தலைமுறைப் படலம்
99மருவிரி வாவி செந்தா மரைமலர்க் கைக ளேந்தச்சொரிமது சிந்துஞ் சந்தத் துடவைசூழ் மதினா தன்னிற்றெரிதர வரசு செய்து தீனிலை நிறுத்திச் செல்வந்தருநபி யிறசூ லுல்லா தலைமுறை தோற்றஞ் சொல்வாம்.1.4. 1
100தெரிபொரு ளரிய வேதத் துட்பொருட் டௌரிவ தாகவருபொரு ளாதி பாரின் முகம்மதை விளக்கஞ் செய்யப்பரிவுறு மனுவா தத்தைப் படைக்கமண் ணெடுத்து வாவென்றுரைதர இசுறா யீலு முவந்துமண் ணெடுத்துப் போந்தார்.1.4. 2
101கதிர்வடி வொழுகி நின்ற ஹபீபுமெய் வகுக்க வேண்டிவிதியவன் ஜிபுற யீலை விரைந்துமண் கொடுவா வென்றான்துதிபெறு மதினா தன்னிற் றூயவோ ரிடத்திற் றோன்றியிதமுற வெடுத்துப் போந்தா ரிமையவர் தலைவ ரன்றே.1.4. 3
102திறலுறு ஜிபுற யீல்தந் திருக்கையி லேந்திப் போந்தபிருதிவி தனையே மிக்கோர் பெறும்பதி சுவனந் தன்னில்நறைவிரி யமுத மெந்த நாளினு மதுர மாறாத்துறைவிரி நதிக டோறுங் கழுவினர் துலங்க வன்றே.1.4. 4
103வரிசையும் பேறும் வாய்த்த முகம்மது நயினார் தோற்றந்தெரிதர வானோர்க் கெல்லாஞ் சோபனஞ் சிறக்கச் சொல்லியரியமெய் பூரித் தோங்கி யகத்தினின் மகிழ்ச்சி பொங்கிப்பெரியவன் றிருமன் வைத்தார் பேரொளி யிலங்கிற் றன்றே.1.4. 5
104மன்னிய கதிர்கள் வீசு மண்ணினை மனுவா தத்தின்வெந்நிடத் திருத்தி யங்கம் வியனுறும் வடிவ தாகத்தென்னுறு ஜலால் ஜமாலென் றேத்திய திருக்கை யாரத்தன்னிக ரில்லாத் துய்யோன் வகுத்தனன் தழைக்க வன்றே.1.4. 6
105மெய்யெழில் வாய்ப்பச் சீவன் விடுத்தனன் விடுத்த போதில்ஐயமற் றெழுந்து சென்னி மூளையி னவத ரித்துவையகஞ் சிறப்ப வானோர் மனங்களிப் பேறி விம்மத்துய்யநற் கலிமா தன்னைச் சொல்லியங் கிருந்த தன்றே.1.4. 7
106உரைதெரி கலிமா வோதி யோதியங் கிருந்த சீவன்இருவிழி தனிலி றங்கி யிருந்தகண் விழித்துச் சொர்க்கச்சொரிகதிர் வாயின் மேலாய் நோக்கின சுடர்க டூங்கும்வரியுறு கலிமாத் தன்னை வளம்பெறக் கண்ட தன்றே.1.4. 8
107துண்டத்தி னாவி தோன்றத் தும்மலுந் தோன்றிப் பின்புவிண்டுரை பகரு நாவின் மேவியல் ஹம்தை யோதிக்கொண்டபின் பிரத்தி சொன்ன குதாதிரு வசன நோக்கியண்டர்நா யகனைப் போற்றி யாதமொன் றுரைப்ப தானார்.1.4. 9
108கணித்தள வறுக்க வொண்ணாக் கடவுளே குதாயே நீங்காமணிக்கதி ரெறிக்குஞ் சொர்க்க வாயிலி னிலைக்கு மேல்பாற்பணித்தநின் றிருநா மத்தி னுடனொரு பெயரைப் பண்பாயணித்துவைத் திருப்பக் கண்டே னவரெவ ரறியே னென்றார்.1.4. 10
109மாதர்சூ லகட்டுட் டோன்றா மனுநெறி ஆத மேநின்காதலி லுதவு கின்ற கான்முளை யதிலோர் பிள்ளைவேதநா யகமா யெங்கும் விளங்குதீன் விளக்காய்ப் பின்னாட்பூதல நபியாய்க் காணப் படைத்தனன் புகலக் கேண்மோ.1.4. 11
110கலைமறை முகம்ம தென்னுங் காரண மில்லை யாகில்உலகுவிண் ணிரவி திங்க ளொளிருடுக் கணஞ்சு வர்க்கம்மலைகட னதிபா தாளம் வானவர் முதலா யும்மைநிலையுறப் படைப்ப தில்லை யெனவிறை நிகழ்த்தி னானே.1.4. 12
111பரத்தினை யிறைஞ்சி வாழ்த்திப் பரிவுபெற் றிருந்த வாதஞ்சிரத்தினி லிருந்த வாவி தேகத்தி னிறைந்த பின்னர்வரத்தினி லுயர்ந்த வண்மை முகம்மது புவியிற் றோன்றத்தரித்தபே ரொளிவுக் கந்தச் சசிகதிர் மழுங்கு மன்றே.1.4. 13
112உடலுறைந் துயிருண் டென்னு மொருவடி வில்லான் செவ்விமடலவிழ் வனச பாத முகம்மதி னொளிவுக் காகவடலுறு மக்கட் கெல்லா மதிபதி யாதத் துக்கேயிடமுறு மமரர் யாரும் சுஜுதுசெய் திடுக வென்றான்.1.4. 14
113தூயவ னுரைப்பக் கேட்ட சொன்மறா தெழுந்து தங்கள்காயமு மனமும் வாக்குங் கலந்தொன்றாய் மகிழ்வு பொங்கிநேயமுற் றிடப் பணிந்த நிரைநிரைக் கைக ளேந்திவாயினிற் புகழ்ந்து போற்றி மலக்குகள் வணக்கஞ் செய்தார்.1.4. 15
114வானவர் செய்யு மந்த வணக்கத்தின் முறைசெய் யாமற்போனத னால ஜாசீல் பொறைநிறை யறிவு போக்கியீனவன் குணத்த னாயி லகுனத்து முனிவும் பெற்றேயானவம் பிபுலீ சென்னும் பெயரும்பெற் றலைந்து போனான்.1.4. 16
115பொருப்புருக் கொண்ட தன்னப் புயத்தெழி லாதந் தன்னுள்விருப்பெனும் போக முற்றி விழைவுபெற் றிடுத லாலேகருப்பமுற் பவிக்க வேண்டுங் காரண காட்சி யாகமருப்புகுங் குழல்ஹவ் வாவை வல்லவன் பிறப்பித் தானே.1.4. 17
116தேங்கமழ் குழலுஞ் சோதித் சிறுபிறை நுதலும் வாய்ப்பப்பாங்கிருந் தமுதஞ் சிந்தும் பனிமொழி மாதை நோக்கியோங்குநின் பெயரைக் கூறென் றுரைத்திட ஹவ்வா வென்றாரீங்கிவ ணுறைந்த வண்ண மேதென வாதங் கேட்டார்.1.4. 18
117செவ்விமன் னெறியா தத்தின் றிருமதி முகத்தை நோக்கிமவ்வலங் குழலா ரிந்த வானகம் புவிமற் றுள்ளவெவ்வையும் படைத்தோ னென்னை வகுத்துநும் வயின்செல் கென்றானவ்வழி யடைந்தே னென்றா ரழகொளிர் பவள வாயால்.1.4. 19
118செப்பிய மாற்றங் கேட்டு ரோமங்கள் சிலிர்த்துப் பூரித்தப்பொழு திறையைப் போற்றி யாதம்ஹவ் வாவை நோக்கிமைப்படுங் கரிய கூந்தன் மடமயில் வடிவுட் கொண்டுதுப்புறை யமுதந் துய்ப்பத் தொடுவதற் கொருமித் தாரே.1.4. 20
119பகரருங் குணமுந் திவ்ய பரிமள மணமு மாறாச்சிகரமு மயங்க வெற்றி திகழ்தரு புயமு நோக்கிநிகரருங் குரிசி லேநன் னிலைபெறு வாழ்வே யென்றன்மகரினைத் தருக பின்னர் வருகவென் றுரைத்திட் டாரே.1.4. 21
120கேட்டனர் மகரென் றாதங் கிலேசமுற் றிறைபாற் கெஞ்சிவாட்டமில் லவனே யெந்த வகைமகர் கொடுப்ப தென்றார்நாட்டிய புகழ்சேர் மக்க முகம்மது நபிதம் பேரிற்சூட்டிய சலவாத் தீரைந் துரைமென விறைவன் சொன்னான்.1.4. 22
121மதிக்கதிர் விலக்குஞ் சோதி முகம்மதின் சலவாத் தோதவிதித்தன னிறையென் றாதம் விளங்கொளிச் சலவாத் தோதித்துதித்தனர் ஹவ்வா கேட்டுச் சோபன மகர்பெற் றேனென்றிதத்தித மித்து நெஞ்ச மிருங்களிப் பேறி னாரே.1.4. 23
122கடிமலர்க் கொடியுஞ் செவ்விக் கற்பகத் தருவும் போலப்பிடிநடை மயிலும் வெற்றி பெறுந்திற லரசுங் காமமிடையறா தமிர்த போக மினிதுண்டு களித்துப் பொங்கிவடிவுறு மின்ப வெள்ள வாரிக்கு ளழுந்தி னாரே.1.4. 24
123துறக்கநன் னகரிற் சேர்ந்து சுகமனு பவிக்கு மாதமறக்கரும் பொருளே வேதம் வருமுறைக் குரிய கோவேபெறற்கருஞ் சுவன வானோ ரனைவரும் பெருது கூண்டென்புறக்கணி னிருப்ப தென்னோ புகலெனப் புகல லுற்றான்.1.4. 25
124நிதமழ கொழுகி வாச நிறைந்தமெய் முகம்ம தென்னுமுதிர்கதிர் விளங்கி நுந்த முதுகிடத் திருக்கை யாலேபதவியி னரிய விண்ணோ ரெண்ணிலாப் பகுப்புக் கூடியிதமுறத் தெரிசிக் கின்றா ரென்றன னென்று முள்ளோன்.1.4. 26
125மருள்கடிந் தறிவு பொங்கு முகம்மதி னொளியை யென்முனருள்கவென் றிருகை யேந்தி யாதநன் னபியுங் கேட்கப்பெரியவன் கருணை கூர்ந்து பெறுமுறை யிதுகொ லென்னநெரிநடுப் புருவக் கான்மே னெற்றியி லொளிர செய்தான்.1.4. 27
126வேறுதாதவிழ் மலர்த்தா ராதநன் னுதலிற்றண்ணெனுங் கதிர்கள்விட் டொழுகுஞ்சோதியைத் தெரிசித் தமரர்க ளணுவுந்தோன்றுதற் கிடமற நெருங்கிக்கோதறப் பெருகி முன்னிலை திரண்டகுழுவினைக் கண்டுகண் குளிர்ந்துமாதவம் பெற்றே னெனமன மகிழ்ச்சிவாரியிற் குளித்தன ரன்றே.1.4. 28
127அறவரி தான காட்சியும் பேறுமமரர்க ளியாவரும் பெற்றாரிறைவனே யானும் பெறுவதற் கென்கணிடத்தினிற் றெரிகிலே னென்றார்நிறைநடு வாகி யுலகெலா நிறைந்தநெடியவ னினிதருள் புரிந்துவிறல்புரி யாதம் வலதுகைக் கலிமாவிரனகத் திடத்தில்வைத் தனனே.1.4. 29
128வரிச்சுரும் பலர்த்தி நறைவிரி துருக்கமருவுபொற் புயத்தெழி லாதம்விரித்தக மகிழ்ச்சி பெருக்கியென் முதுகில்விளங்கொளி யின்னமு முளவோதெரித்தருள் புரியென் றிறையுடன் மொழியச்செவ்விய முகம்மது நபிதம்முரித்துணைத் தோழர் நால்வருண் டவர்தமொளியுள வெனவுரைத் தனனே.1.4. 30
129அப்பெரும் பெயர்க ணான்குபே ரொளியுமகுமதி னொளியடுத் திருப்பவைப்பையென் விரல்க னான்கினு மென்னவல்லவ னவ்வழி யமைத்தான்மெய்ப்பொருள் கலிமா விரனடு விரன்மென்விரற்சிறு விரற்பெரு விரல்களிப்படி விரல்க ளைந்தினு மைவர்விளங்கொளி யுகிரிலங் கினவே.1.4. 31
130பகுத்தொளி விரிக்கு நகத்தொளி விருக்கும்பண்புகண் டதிசயித் தாதமகத்தினின் மகிழ்ந்து கண்ணிணை மலரினடிக்கடி வைத்துவாய் முத்திமிகுத்திடும் வரிசை நபிசல வாத்தைவிளக்கிவாய் மறாதெடுத் தோதிவகுத்தவல் லவனைப் பணிந்துவா னகத்தில்வாழ்ந்தினி திருக்குமந் நாளில்.1.4. 32
131மிக்கெழி லாத மேலவன் விதித்தவிலகலைப் பொருந்தின படியாலக்கையின் விரல்க ளொளிவுமுன் னிருந்தவணியணி முதுகிடத் தாகித் துக்கமு மிகுந்து சுவர்க்கமு மிழந்துதொல்லுல கடைந்துவெவ் வேறுதிக்கினின் மயங்கி யிருவரு மலைத்துத்தீவினைக் குரியவ ரானார்.1.4. 33
132ஆதியே ஹக்கா றப்பனா விறையேயழிவிலாப் பேரின்ப வாழ்வேநீதியே யெனவும் பலதரந் தவுபாநிகழ்த்தியுந் துன்பம்விட் டொழியாப்போதிலே யெனது முதுகிடத் துறைந்தபொருளொளிச் சிறப்பெனும் பொருட்டாற்சோதியே தவுபாத் தனைக்கபூ லாக்கென்றுரைத்தனர் சுடர்முடி யாதம்.1.4. 34
133நறைதரு மறுவி கமழ்முகம் மதுநந்நபிதிருப் பெயர்சொலும் பொருட்டாயிறைவனு மாதஞ் செயுந்தவு பாவுக்கிசைந்தினி துறக்கபூ லாக்கவுறைதரு துன்ப மனைத்தையும் போக்கியூழ்வினை பின்புமொன் றாக்கமறுமதி யகடு தொடுமுடி யறபாமலையினி லிருவருஞ் சேர்ந்தார்.1.4. 35
134கூடிய விருவர் தாமுஞ்சுத் தாவிற்குடியிருந் திருபது சூலில்நாடிய பொருட்போ னாற்பது பெயரைநன்குறப் பெற்றதின் பின்னர்சூடிய கிரீட பதிநபி யமரர்துரைகனா யகமெனு மிறசூல்நீடிய வொளியு சிறந்தொரு சூலினிலமிசை சீதுதித் தனரே.1.4. 36
135மருமலர்த் திணிதோ ணிறைமதி வதனமுகம்மதின் பேரொளி யிலங்கித்தெரிமறை ஆத மக்களிற் சிறந்தசீதுவி னிடத்திருந் ததனாற்பரிவுறு நபிப்பட் டமும்வரப் பெற்றுப்பல்கலைக் குரிசிலென் றேத்தவரியவன் கொடுத்த வரிசைக ணிறைந்தவைம்பது சுகுபிறங் கியதே.1.4. 37
136சீதுவி னிடத்தி னிருந்தவர் மதலைசிறந்தமா மணிமுடிக் குரிசின்மாதவர் கமல வதனயா னுசுதம்வயினுறைந் திருந்தணி சிறந்துதாதவிழ் மலர்த்தார்க் குங்குமக் கலவைத்தடப்புயர் யானுசு தருகார்நீதிசேர் ஹயினா னிடத்தினி லிருந்துநிலைபெற விளங்கிய தன்றே.1.4. 38
137தண்மணிக் கதிர்விட் டெறிக்கும்வெண் கவிகைக்தடவரை மணிப்புய ஹயினான்கண்மணி மகுலீ லிடத்தினி லிருந்துகவின்குடி கொண்டெழுந் தோங்கிவெண்மணித் தரளத் தொடைப்புய மகுலீல்வேந்தருக் குற்றசே யெனவாழ்உண்மைநன் னெறிசே ரெறுதுவி னிடத்தினுறைந்தினி திலங்கிய தன்றே.1.4. 39
138வடவரை குலுங்க நடமிடு துரங்கமன்னவ ரெறுதுதம் மதலைகடகரிக் குவட்டி னிணையெனப் பணைத்தகதிர்முலைத் துடியிடை மடவார்விடமெனக் கரிய கொலைவிழிக் கணங்கள்வீற்றிருந் திடுமலர்ப் புயத்தார்இடிமுர சதிரு முன்றிலா ருகுநூகிடத்தினி லிருந்திலங் கியதே.1.4. 40
139கடலெனத் தானை யரசர்வந் தீண்டிக்கைகுவித் திருபுற நெருங்கச்சுடர்மணித் தவிசி னுயர்ந்தர சியற்றிச்சுருதிநே ருறையுகு நூகுபுடையிருந் தவர்செய் யறமெலாந் திரண்டோர்புத்திர வடிவெடுத் தென்னவிடுகொடை கவிப்பப் புரந்தசே யிதுரீசிடத்தினி னிறைந்திருந் ததுவே.1.4. 41
140நன்னெறி நயினா ரொளியிருந் ததனானபியெனும் பட்டமும் பெறலாய்உன்னுதற் கரிய முப்பது சுகுபுமுடையவ னருளினா லிறங்கிப்பன்னிய வுலகத் தொழிலெவை யவைக்கும்பரிவுறு முதன்மையே யிவரென்றெந்நிலங் களுக்கும் பெயர்பெற வரசாயிருந்திட வியற்றிய தன்றே1.4. 42
141மெய்த்தவக் குரிசி னபியிது ரீசுவிருப்புற வுதித்தநன் மதலையுத்தமர் மத்தூ சல்குதம் மிடத்தவ்வொளியுறைந் துலகெலா மிறைஞ்சவைத்தபின் மத்தூ சல்குதம் மைந்தர்மடந்தையர் மடலெடுத் தேந்தச்சித்திரக் கவின்பெற் றிருந்தலா மக்குவயின்சிறந் திலங்குமவ் வொளியே.1.4. 43
142தருமநன் னெறியா லுலகெலாம் புரக்கத்தகும்புக ழானலா மக்குத்திருமக நூகு வயினுறைந் திருந்துசிறந்தபே ரொளியினா லவர்க்கும்பெருகிய நபிப்பட் டமுமிகப் பெறலாய்ப்பிரளயப் பெருக்கெடுத் தெறியுங்கருநிறக் கடல்வங் கமுங்கவி ழாதுகாட்சியாய்க் கலாசுபெற் றதுவே.1.4. 44
143வரிசையு மிமையோர் துதிசெயும் பரிசும்வரப்பெறு நூகுதம் மதலைதரைபுகழ்ந் தேத்தச் சாமிடத் திருந்துதனபதி கனபதி யாக்கிக்கருவிளை விழியார் கவரிகா லசைப்பக்கனகசிங் காதனத் திருத்திவிரிகட லுலகம் பொதுவறப் புரக்கும்வேந்திவ ரெனவியற் றியதே.1.4. 45
144சாமுதன் மதலை யறுபகு சதுமன்றம்மிடத் தவதரித் திருந்துதூமமும் புழுகுந் தகரமுஞ் சாந்துந்தோய்ந்திருண் டடர்ந்தபூங் குழலார்காமுக ரெனச்செய் தணிமணிப் புயங்கள்கண்கொளா தழகிருந் தொழுகுமாமதக் களிற்ற ரறுவகு சதுமாமதலைசா லகுவயி னடைந்த1.4. 46
145சாலகு தம்பா லடைந்துவாய் மைக்குந்தவத்திற்கும் பவுத்துக்கு மிவரேமேலவ ரெனச்செய் திருந்தவர் மதலைவேந்தர்ஐ பறுவயின் புரந்துகாலடி மறைக்கக் கவிழ்மத மிறைக்குங்கடகரி யரசர்ஐ பறுசேய்பாலகு வயின்வீற் றிருந்துல கெல்லாம்பரித்திடப் பண்புபெற் றதுவே.1.4. 47
146தேன்கிடந் தொழுகுங் குங்குமத் தொடையற்செழும்புயன் பாலகு மதலைவான்கிடந் தனைய மின்னொளிர் வடிவார்மன்னன்றா குவாவிடத் திருந்துகூன்கிடந் தனைய பிறைகறைக் கோட்டுக்குஞ்சரத் தரசர்கை கூப்பமீன்கிடந் தலர்வான் மதியெனுங் கவிகைவேந்தர்வேந் தெனவிளைத் ததுவே.1.4. 48
147வாரணி முரச மிடியெனக் கறங்கும்வாயிலான் றாகுவா மதலைதாரணி தருவா யுதித்தசா றூகுதம்மிடத் திருந்தெழில் சிறந்துகாரணக் குரிசி லானசா றூகுகண்ணிணை மணியென விளங்கும்ஏரணிப் புயனா கூறிடத் துறைந்தங்கிலங்கிய தருமறை யொளியே.1.4. 49
148வெண்டிரை புரட்டுங் கருங்கட லுடுத்தமேதினிக் கரசென விளங்குந்திண்டிற னாகூ றுதவிய மதலைசெழும்புக ழாசறு வயின்வந்தெண்டிசை முழுது மொருதனிச் செங்கோலியற்றுவ திவரென வியற்றிவண்டணி மலர்த்தா ராசறு தவத்தால்வருமொரு வடிவுறு மதலை.1.4. 50
149முருகவிழ் புயத்தார் நபியிபு றாகீம்செய்தவப் பலனொரு வடிவாய்ஈனமி லிசுமா யீல்நபி யிடத்தினிருந்திலங் கியவொளிப் பொருட்டால்வானகத் தமரர் சுடர்விரி சுவனமடந்தைய ரினிதுவாழ்த் தெடுப்பக்கானகு மலர்த்தார் செழுமணிக் கழுத்திற்கருவிவாய் தடவில வன்றே.1.4. 51
150தீனிலைக் குரிய நபியிபு றாகீம்செய்தவப் பலனொரு வடிவாய்ஈனமி லிசுமா யீல்நபி யிடத்தினிருந்திலங் கியவொளிப் பொருட்டால்வானகத் தமரர் சுடர்விரி சுவனமடந்தைய ரினிதுவாழ்த் தெடுப்பக்கானகு மலர்த்தார் செழுமணிக் கழுத்திற்கருவிவாய் தடவில வன்றே.1.4. 52
151மன்னவ ரிசுமா யீல்தரு மதலைமணிவிளக் கனையதா பித்துதன்னிடத் திருந்து தரணியேழ் புரக்குந்தலைபதி நிலைபெற வியற்றிமின்னவிர் மௌலி விளங்குதா பித்துவேந்தர்பெற் றெடுத்தமா மதலையிந்நிலம் புகழு மெசுஹபு வெனும்பேரெடுத்தவ ரிடத்திலங் கியதே.1.4. 53
152உடல்பிளந் துயிருண் டுதிரங்கொப் பளித்தூனுணங்குவேற் கரரெசு ஹபுதம்பிடிநடை மடவாள் பெற்றெடுத் துவந்தபிள்ளையஃ றுபுவயி னிருந்துகடல்கிளர்ந் தனைய தானையஃ றுபுதங்கண்மணி தயிறகு என்போர்இடமுற விருந்து நெடும்புகழ் விளக்கியெழில்கனிந் திலங்கிய தன்றே1.4. 54
153சந்தனந் திமிர்ந்து திரண்டமற் புயத்தார்தயிறகு தருதிரு மதலை கந்தெறி தறுகட் கரடமா லியானைக்காவலர்க் கசனிநா கூறுசுந்தர வதனத் திலங்கிட விருந்துசொரிமழைச் செழுங்கைநா கூறுமைந்தர்மிக் குவந்தம் மிடத்துறைந் திருந்துமாட்சிபெற் றிலங்கிய தன்றே.1.4. 55
154மிக்குவ மெனும்பே ரரசுதம் மதலைவெயில்விடு மணிமுடி யுததுபக்கலி லிருந்து செல்வமுஞ் செருக்கும்பண்புறப் பெருக்கிட நிறைத்துத்திக்கனைத் தினும்பேர் விளங்கிட விளங்கித்திறல்பெறு முத்துநன் மதலைதக்கமெய்ப் புகழ்சே ரிருநிதி யதுனான்தம்மிடத் திருந்தெழி றழைத்த1.4. 56
155வெண்ணிலா விரிக்கு மொருதனிக் குடைக்கீழ்வேந்துசெய் தருள்புரி யதுனான்கண்ணின்மா மணியா யுதித்திடு முஅத்துகவின்பெற விருந்தவ ரிடத்தில்எண்ணிலா வரச ரடிபணிந் திறைஞ்சவியற்றிய பேரொளி முஅத்துபுண்ணியப் பொருளா யுருவெடுத் துலகம்புரந்தநி சாறிடத் துறைந்த1.4. 57
156ஒருகுடை நிழற்கீ ழிருநிலம் புரந்திட்டுருமென மும்முர சதிரத்திருநிறை நான்கு திக்கினுஞ் செங்கோல்செலுத்திய நிசாறெனு மரசர்பெருகிய நிலைமைக் குலக்கட னாப்பண்பிறந்தெழுங் கதிரவ னொப்பவருமுகின் முலறு நபியிடத் துறைந்துமகிதலம் புகழ்ந்திட விருந்த.1.4. 58
157அறிவெனுங் கடலாய் வரம்புபெற் றிருந்தவருமறை முலறுநன் னபிக்குப்பெறுபல னெனவந் துதித்தஇல் யாசுநபியெனப் பேரொளி தங்கித்துறவலர்க் கரசா யிருந்தஇல் யாசுபுத்திரர் பவுத்தெலா நிறைந்தமறுமனர் குலக்கோ ளரியெனப் பிறந்தமாமணி முதுறக்கத் தெனுமால்.1.4. 59
158முகம்மது நயினா ரொளிவிருந் திலங்குமன்னவர் முதுறக்கா மதலைசெகமகிழ் குசைமா வயினுறைந் தரசர்செழுமுடி நடுமணி யெனலாய்நகுகதிர் விரிவெண் குடைநிழ லிருந்தநரபதி யெனுங்குசை மாமன்புகழெனத் தோன்றி வருதுறை கனானாப்பூபதி யிடத்தின்வந் திருந்த.1.4. 60
159மடங்கலே றனைய தன்பதி கனானாமகிபதி தவத்துறு மதலைநுடங்கிடை மடவார் கருத்தினைக் கவருநுலறெனு மழகுறு மரசர்தடம்புயங் களின்மா நிலங்குடி யிருப்பத்தங்கியங் கவர்பெறு மரசர்முடங்குளைப் பகுவாய் மடங்கலங் கொடியார்மோலிமா லிக்குசார் பிருந்த.1.4. 61
160திண்டிற லரசர் சிரம்பொடி படுத்திச்செவந்தவாட் கரத்தர்மா லிக்குமண்டலம் விளக்கு முழுமணி விளக்காய்வந்தமன் பிஃறிடத் திலங்கிஎண்டிசை யிடத்து மெழுகடற் புறத்துமறுவகைத் தானைகொண் டெதிர்ந்துகொண்டமர் கடந்த வரசெனப் பெயருங்கொடுத்தது திருநபி யொளியே.1.4. 62
161குரிசிலென் றுயர்ந்த பிஃறெனு மரசர்குறைஷியங் குலத்துறு மதலைவிரிதிரை யுவரி நடுநிலம் புரந்தவேந்தர்கா லிபுவயி னிலங்கிக்கரிபரி பதாதி ரதம்புடை நெருங்குங்கடைத்தலை காலிபு தருசேய்முருகவிழ் மரவத் தொடைப்புயர் லுவையுமுகமலர் தரவிருந் தொளிரும்.1.4. 63
162வான்மதி பகுந்த முகம்மது நயினார்வடிவுறும் பேரொளி லுவையாங்கோன்மகன் ககுபு தம்மிடத் திலங்கிக்குன்றினி லிடும்விளக் காகிச்சூன்முதிர் மழைக்கை ககுபுகண் மணியாய்த்தோன்றிய முறத்திடத் துறைந்தசேனமுங் கொடியுந் தொடர்கதிர் வடிவேற்செம்மலென் றுயர்ச்சிபெற் றிருந்தார்.1.4. 64
163கொந்தலர்ந் திருண்ட கருங்குழன் மடவார்கொங்கையிற் றடம்புய மழுந்துஞ்சுந்தரர் முறத்து மதலையாய் நிலத்திற்றோன்றிய மதிமுகக் கிலாபுமந்தர மனைய தடம்புய ரிடத்தில்வந்திருந் தவர்தரு மதலைகந்தடர் தறுகட் கரடமா லியானைக்காவலர் குசையிடத் துறைந்த1.4. 65
164வில்லுமிழ் வயிரத் தொடைபுரண் டசைந்தவிறற்புயர் குசைதரு மதலைசெல்லென விரங்குஞ் சினந்துவே றாங்கும்செழுங்கர ரப்துல் முனாபுமல்லலைத் திணிதோ ளரசர்நா யகர்தம்வயினுறைந் தவர்பெறு மதலையெல்லவ னெனவே கலியிரு டுரத்தியிருந்தஹா ஷீமிடத் துறைந்த.1.4. 66
165கிம்புரிக் கோட்டுக் கடமலை துளைத்துக்கிளைத்திடும் வேற்கரர் ஹாஷீம்அம்புவிக் கரசாய்ப் பெற்றெடுத் துவந்தவருமணி யப்துல்முத் தலிபுநம்பிய தவப்பே றெனவிருந் திலங்கிநறைகமழ் அப்துல்முத் தலிபுதம்பெயர் விளக்கக் குவலயத் துதித்தசந்ததி யப்துல்லா வென்போர்.1.4. 67
தலைமுறைப் படலம் முற்றிற்று.
ஆகப் படலம் 4-க்குத் திருவிருத்தம் - 165

1 comments:

இப்னு அப்துல் ரஜாக் January 30, 2010 at 11:04 PM  

உள்ளம் கவர்ந்தது,அதனால் வென்றது.

http://penaamunai.blogspot.com/

Post a Comment

  © Blogger template Snowy Winter by Ourblogtemplates.com 2009

Back to TOP