ஏழை குடிசையில் எளிய சூரிய கிரகணம்
>> Saturday, January 16, 2010
ஏழை குடிசையில் எளிய சூரிய கிரகணம்
அதிரை தமிழாசிரியர் டாக்டர் ஆ. அஜ்முதீன்
அபூர்வ சூரிய கிரகணம் பிர்லா கோளரங்கத்தில் பல ஆயிரம் செலவு, மக்கள் வரிசையில் மணிக்கணக்காக நின்று அறிவியல் கருவிகள் வழியாக கங்கண சூரிய கிரகணத்தைக் கண்டனர்.
இத்தகைய செலவுகள் இல்லாமலும் நீண்ட காத்திருப்பு இல்லாமலும் சூரிய கிரகணத்தைப் பார்க்கலாம் என்பது எத்தனைப் பேருக்குத் தெரியும் என்பது தெரியவில்லை.
நண்பர் ஒருவரைக் காண அவரது இல்லத்திற்குச் சென்றேன். என்ன ஆச்சரியம் அவரது இல்லத்தில் கீற்றுகளில் உள்ள ஓட்டைகள் வழியே சூரிய ஒளிகள் தரையிலும் சுவற்றிலும் விழுந்தன. அவ் வொளிகள் வழியே அபூர்வ சூரிய கிரகணம் தெரிந்தது. அந்த ஒளிகள் உடனே படம் பிடிக்கப்பட்டது. எவ்வித அறிவியல் கருவிகளும் இல்லாத காலத்தில் நம் முன்§É¡ர் இப்படித்தான் நிழலைக் கொண்டு ஆய்வு நடத்தினர் போலும். 2019இல் வரும் கங்கண சூரிய கிரகணத்தை ஓலைக் குடிசையில் காணலாமே. அப்படங்கள் பதிவு செய்யப்படுகிறது. 15.01.2010
0 comments:
Post a Comment